< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் புகைப்படம்: புதிய படத்துக்காக எடை கூடிய சூர்யா
சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: புதிய படத்துக்காக எடை கூடிய சூர்யா

தினத்தந்தி
|
12 May 2023 8:02 AM IST

சூர்யா தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்கிறார். சூரரை போற்று, ஜெய்பீம் படங்கள் அவரது நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுக்கொடுத்தன. சூரரை போற்று படத்தில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது அவருக்கு 42-வது படம். ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படம் 3 டி தொழில் நுட்பத்தில் அதிக பொருட் செலவில் தயாராகிறது. கங்குவா படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 மொழிகளில் இந்த படம் தயாராவது சிறப்பு அம்சம். சரித்திர கதையம்சத்தில் உருவாவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் இருக்கும் சூர்யாவின் தோற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் உடல் எடை கூடி தாடி மீசையில் இருக்கிறார். புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்