< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் புகைப்படம்: கர்ப்பிணியாக நித்யாமேனன்
சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: கர்ப்பிணியாக நித்யாமேனன்

தினத்தந்தி
|
20 Nov 2022 3:08 PM IST

நித்யாமேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தென் இந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் கேரள நடிகையான நித்யாமேனன். இவரது நடிப்பில் தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மனி, காஞ்சனா 2, மெர்சல், 24 உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன. தனுஷ் ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்துள்ளது. தெலுங்கு, மலையாள படங்களிலும் திறமையான நடிகையாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் நித்யாமேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், உண்மையில் நான் கர்ப்பமாக இல்லை என்ற பதிவையும் புகைப்படத்தின் கீழே பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. விரைவில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என நித்யா மேனனுக்கு ரசிகர்கள் அறிவுரை சொல்லி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்