< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் புகைப்படம்: கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்
சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்

தினத்தந்தி
|
5 July 2022 9:47 AM IST

கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவிக்கும் வகையில் கமர்ஷியல் பட கதாநாயகி என்ற இமேஜை உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேசுக்கு குடும்ப பாங்கான நடிகை என்ற முத்திரை பதிந்தது. அதுமாதிரியான பட வாய்ப்புகளே வந்தன.

பெண்ணை முதன்மைப்படுத்தும் கதைகளில் தொடர்ந்து நடித்தார். ஆனால் அந்த படங்கள் வசூல் ரீதியாக கைகொடுக்கவில்லை. குடும்ப பாங்கான நடிகை இமேஜை அவரால் மாற்றவும் முடியவில்லை. வணிக படங்களின் டைரக்டர்கள் மற்றும் நடிகர்கள் பார்வையில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவிக்கும் வகையில் கமர்ஷியல் பட கதாநாயகி என்ற இமேஜை உருவாக்கும் முயற்சியில் கீர்த்தி சுரேஷ் தற்போது இறங்கி இருக்கிறார்.

அதற்காக தன்னை அரைகுறை உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். கீர்த்தி சுரேசின் மனமாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கவர்ச்சி புகைப்படங்களை வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். கவர்ச்சி அவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்