< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் புகைப்படம்: நடிகர் கமல்ஹாசனுடன் முன்னாள் கதாநாயகிகள்
சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: நடிகர் கமல்ஹாசனுடன் முன்னாள் கதாநாயகிகள்

தினத்தந்தி
|
10 Feb 2023 11:24 PM IST

நடிகர் கமல்ஹாசனுடன் தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த ஷோபனா, ஜெயஸ்ரீ, சுஹாசினி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள தியேட்டரில் 'பதான்' படத்தை நான்கு பேரும் பார்த்தபோது இந்த புகைப்படத்தை ஜெயஸ்ரீ எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். ஷோபனா 1984-ல் வெளியான 'எனக்குள் ஒருவன்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து இருந்தார். ஜெயஸ்ரீ 'தென்றலே என்னை தொடு' படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். ஏற்கனவே தீபிகா படுகோனேவின் காவி நீச்சல் உடை, கவர்ச்சி நடன சர்ச்சையில் சிக்கி 'பதான்' படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியபோது ஷாருக்கானை, கமல்ஹாசன் வாழ்த்தி இருந்தார். கமல்ஹாசனும், ஷாருக்கானும் 'ஹே ராம்' படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பை மீறி 'பதான்' வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் இந்த படம் ரூ.800 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. 'பதான்' 2-வது பாகம் எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

மேலும் செய்திகள்