< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் சர்ச்சை போஸ்டர்... மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்த ஹனிரோசுக்கு எதிர்ப்பு
சினிமா செய்திகள்

வைரலாகும் சர்ச்சை போஸ்டர்... மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்த ஹனிரோசுக்கு எதிர்ப்பு

தினத்தந்தி
|
18 July 2023 10:06 AM IST

தமிழில், 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் 'ரேச்சல்' என்ற புதிய படத்தில் ஹனிரோஸ் நடித்து இருக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ரேச்சல் படத்தில் ஹனிரோஸ் மாட்டுக்கறி வெட்டுபவராக நடிக்கிறார். படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ஹனிரோஸ் கத்தி வைத்து மாட்டுக்கறி வெட்டிக்கொண்டு இருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த போஸ்டர் வைரலாகிறது.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பசுவதைக்கு எதிராக சில அமைப்புகள் போராடி வருகின்றன. பசு பாதுகாப்பு இயக்கங்களும் உள்ளன. இந்த நிலையில் ஹனிரோஸ் மாட்டுக்கறி வெட்டும் காட்சி பசுவதைக்கு எதிராக போராடுபவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. கர்நாடக மாநில பா.ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

ஹனிரோஸ் கூறும்போது, "ரேச்சல் படத்தின் கதை வித்தியாசமானது. கதையை கேட்டதும் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்