< Back
சினிமா செய்திகள்
வன்முறை எதையும் தராது: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் சோனம் கபூர் வருத்தம்
சினிமா செய்திகள்

வன்முறை எதையும் தராது: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் சோனம் கபூர் வருத்தம்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:40 PM IST

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து நடிகை சோனம் கபூர் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

சென்னை,

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தி முன்னணி நடிகை சோனம் கபூரும் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். இவர் தமிழ், இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.

சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வன்முறையும் மரணமும் எதையும் கொண்டு வந்து தரப் போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனிதநேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் ஆயுதமாக அகிம்சையை போதித்தார். அகிம்சையும் உண்மையும் ஒன்றோடு ஒன்று கலந்தவை.

நமது வார்த்தையிலும், எண்ணத்திலும், செயலிலும் எப்போதுமே அகிம்சையை கடைபிடிக்க முடியாதுதான். ஆனாலும் அகிம்சையை குறிக்கோளாக வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். பாலஸ்தீனத்தை சேர்ந்த முன்னணி எழுத்தாளர் கிகி ஹாதிட் கூட இது நியாயமற்ற சம்பவம் என்று சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்த போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள எனது நண்பர்களும் இதில் சிக்கி தவிப்பது இன்னும் வேதனையை அளிக்கிறது. இந்த போர் பிரச்சினை விரைவாக முடிவுக்கு வரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்