< Back
சினிமா செய்திகள்
வனத்துறை விதி மீறல்... பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு
சினிமா செய்திகள்

வனத்துறை விதி மீறல்... பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
25 Jan 2023 8:14 AM IST

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் பண்ணை வீட்டில் அனுமதி இல்லாமல் 4 வெளிநாட்டு வாத்துக்களை வளர்ப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவருக்கு மைசூரு மாவட்டம் கெம்பய்யணஹூண்டி கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. அடிக்கடி இந்த பண்ணை வீட்டுக்கு அவர் ஓய்வு எடுக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் தர்ஷன் பண்ணை வீட்டில் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு பறவைகளை வளர்ப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் 4 வெளிநாட்டு வாத்துக்களை பண்ணை வீட்டில் வளர்த்தது தெரிய வந்ததது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்ஷன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''இந்திய வனத்துறை சட்டப்படி வெளிநாட்டு வாத்துக்களை தர்ஷன் அனுமதி பெறாமல் வளர்த்து வந்தது குற்றம் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட வாத்துகள் ஹிதினார் ஏரியில் விடுவதற்கு கோர்ட்டில் அனுமதி பெறப்படும்'' என்றனர்.

மேலும் செய்திகள்