< Back
சினிமா செய்திகள்
விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தை வெளியிடும் வெற்றிமாறன்
சினிமா செய்திகள்

விமல் நடிக்கும் 'மா.பொ.சி' படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

தினத்தந்தி
|
1 April 2024 8:26 PM IST

'மா.பொ.சி' படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிராஜ் தயாரிக்கிறார்.

சென்னை,

'பசங்க' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதன்பிறகு களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். விமல் நடிப்பில் கடந்த ஆண்டில் 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து விமல், இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'தேசிங்கு ராஜா 2' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விமல், 'மா.பொ.சி' என்ற படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிராஜ் தயாரிக்கிறார். இந்த படம் கடந்த 2022-ம் ஆண்டிலேயே பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'மா.பொ.சி' திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி (GrassRoot Film Company) வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகள்