< Back
சினிமா செய்திகள்
விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

விமல் நடிக்கும் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Aug 2023 1:36 AM IST

விமல் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ், சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒடியன் டாக்கீஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.



மேலும் செய்திகள்