< Back
சினிமா செய்திகள்
விபத்தில் சிக்கிய விஜய் பட வில்லன்
சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கிய விஜய் பட வில்லன்

தினத்தந்தி
|
16 Aug 2023 3:06 PM IST

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத். இவர் பான் இந்தியா படமாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் 2 படத்தில் நடித்து பாராட்டு பெற்றார். தற்போது தமிழில் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார்.

அடுத்து தெலுங்கில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் டபுள் இஸ்மார்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாள் சண்டை காட்சியொன்றை படமாக்கினர்.

அப்போது வாள் சஞ்சய்தத் தலையை தாக்கி விபத்து ஏற்பட்டது. இதில் சஞ்சய்தத் படுகாயம் அடைந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து சஞ்சய்தத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டன.

தெலுங்கில் உருவாகும் டபுள் இஸ்மார்ட் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்