< Back
சினிமா செய்திகள்
புதுமனைவியுடன் பாலி தீவில் வில்லன் நடிகர்
சினிமா செய்திகள்

புதுமனைவியுடன் பாலி தீவில் வில்லன் நடிகர்

தினத்தந்தி
|
12 July 2023 10:53 AM IST

பிரபல வில்லன் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் கில்லி, பாபா, பகவதி, ஏழுமலை, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே நடன கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

60 வயதில் திருமணம் தேவையா? என்று வலைத்தளத்தில் பலரும் அவரை கேலி செய்தனர். காதலுக்கு வயது இல்லை என்று ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் புதிய மனைவியுடன் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் செல்பி புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகிறது.

மேலும் செய்திகள்