< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விக்ராந்த்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விக்ராந்த்

தினத்தந்தி
|
15 Jun 2024 9:13 PM IST

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே23’ படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அயலான் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதை அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அடுத்த அப்டேட்டாக படத்தில் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ராந்த் கடைசியாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்