< Back
சினிமா செய்திகள்
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
9 Sept 2024 1:33 PM IST

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்குகிறார்.

சென்னை,

'தா', 'வில் அம்பு' போன்ற படங்களை இயக்கியவர் ரமேஷ் சுப்ரமணியம். பிக் பேங் சினிமாஸ் தயாரித்து இயக்கும் இந்த புதிய படத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'தி கில்லர் மேன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் விக்ராந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்