< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் - இன்று டைட்டில் வெளியீடு
|23 Oct 2022 3:56 PM IST
இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை,
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையக்க உள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டைட்டில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது.இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.