புதிய தோற்றத்தில் நடிக்க 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
|‘தங்கலான்' படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக டைரக்டர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பாராட்டு நடிகர் விக்ரமுக்கு உண்டு. முந்தைய பிதாமகன், தெய்வத்திருமகள், அந்நியன், பீமா, ஐ, இருமுகன், கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் என்று பல படங்களில் இதை நிரூபித்தும் இருக்கிறார்.
இப்போது 'தங்கலான்' படத்திலும் தன்னை உருமாற்றி உள்ளார் இந்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்து வருகிறார். கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது.
பெரும்பகுதி படப்பிடிப்பை கோலார் தங்க வயல் பகுதியிலேயே நடத்தி வருகிறார்கள். இந்த படத்துக்காக விக்ரம் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம் போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக நிற்கும் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த தோற்றத்துக்கு மாற விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக டைரக்டர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.