< Back
சினிமா செய்திகள்
விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
5 Sept 2022 6:20 AM IST

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், கதிர், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும் சிறப்பாக அமைந்ததோடு, அதில் நடித்த விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படதம் அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக்ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.

வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரம் வேதா இந்தி திரைப்படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்