விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
|விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு முடிந்த நிலையில் 4 ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில் தற்போது 'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வருகிற நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. இதனை போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்து உள்ளது. அறிவித்தபடி இந்த முறையாவது வெளியாகுமா என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.