< Back
சினிமா செய்திகள்
விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
8 July 2024 5:49 PM GMT

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'தங்கலான்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தங்கலான்' திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.


மேலும் செய்திகள்