< Back
சினிமா செய்திகள்
அஜித், சூர்யா அளவிற்கு ரசிகர்கள் இல்லையா? கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில்
சினிமா செய்திகள்

அஜித், சூர்யா அளவிற்கு ரசிகர்கள் இல்லையா? கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில்

தினத்தந்தி
|
12 Aug 2024 3:14 PM IST

நடிகர் விக்ரம் தன் ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை,

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'தங்கலான்' புரோமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புரோமோசனில் ஒரு பகுதியாக நேற்று நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் மதுரையில் ரசிகர்களைச் சந்தித்தனர்.

அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், "நடிகர்கள் அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லையே" என விக்ரமிடம் நேரடியாகக் கேட்டார். இதைக் கேட்ட விக்ரம், "என் ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. திரையரங்கில் வந்து பாருங்கள். எல்லா ரசிகர்களும் என் ரசிகர்கள்தான். நானும் தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களைக் கொடுத்தவன்தான். எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆனால், சினிமாவின் தரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிறைய முயற்சிகள் செய்தேன். அந்த உழைப்பே தங்கலான் மற்றும் வீர தீர சூரனாக உருமாறியிருக்கிறது. டாப் 3, 4, 5 என்ற நம்பர் கணக்கெல்லாம் எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை. எனக்கான ரசிகர்களை நீங்கள் தியேட்டருக்கு வந்து பாருங்கள், உங்களுக்குத் தெரியும். " எனக் கூறினார். இதைக்கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் செய்திகள்