< Back
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
27 Jun 2022 10:03 PM IST

நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹாதிர் ஸ்வரா சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஶ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் தனஞ்செயா, நகைச்சுவை நடிகர் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி இந்த டீசரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்