விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில் 'பார்த்திபேந்திரன் பல்லவன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Release date is locked
Action thriller #PaayumOliNeeYenakku will knock cinemas on June 23rd #PONYonJune23rd @iamVikramPrabhu @vanibhojanoffl @Dhananjayaka @KarthikFilmaker @kmh_productions @thespcinemas @mahathi_sagar @Sridhar_DOP @ECspremkumar @divomusicindia @kisham77… pic.twitter.com/V4nqfnXir1