விக்ரம் பிரபு நடித்துள்ள 'இறுகப்பற்று' படத்தின் டிரெய்லர் வெளியீடு
|விக்ரம் பிரபு, விதார்த் நடித்துள்ள ‘இறுகப்பற்று’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Here it is! See you in theatres on October 6th
Relationships are a maze of emotions, and #Irugapatru reveals the twists and turns! Here is the trailer of the compelling journey.
https://t.co/QvBkIJR9q6@iamVikramPrabhu @Shraddhasrinath @vidaarth_actor #Shri @abarnathi21…