< Back
சினிமா செய்திகள்
மீண்டும் ஸ்ரீதிவ்யா
சினிமா செய்திகள்

மீண்டும் ஸ்ரீதிவ்யா

தினத்தந்தி
|
2 Jan 2023 12:50 PM IST

விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் சில வருட இடைவெளிக்குப்பின், 'ரெய்டு' என்ற புதிய படத்தில், மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.

தமிழில் 2013-ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து இருந்தார். தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி, மாவீரன் கிட்டு, மருது போன்ற படங்களிலும் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக ஸ்ரீதிவ்யா நடிப்பில் சங்கிலி புங்குலி கதவ திற என்ற படம் 2017-ல் வந்தது. அதன் பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு படங்கள் இல்லை. இந்த நிலையில் பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 'ரெய்டு' படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்