விக்ரம் பிரபு நடித்துள்ள படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
|விக்ரம் பிரபு நடித்துள்ள 'இறுகப்பற்று' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் நாளை (ஆகஸ்ட் 31) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.