பாயும் ஒளி நீ எனக்கு: அதிரடி கதையில் விக்ரம் பிரபு
|விக்ரம்பிரபு, வாணிபோஜன் ஜோடியாக நடிக்கும் புதிய படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. தனஞ்செயா, விவேக் பிரசன்னா, வேல.ராமமூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை கார்த்திக் அத்வைத் டைரக்டு செய்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "சமூக பிரச்சினை சாதாரண மனிதனை எப்படி பாதிக்கிறது. அவனது எதிர் விளைவுகள் என்ன? என்பது கதை. இது முழுக்க அதிரடி சண்டை திரில்லர் படமாக இருக்கும். 9 சண்டை காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு சண்டையும் மிகை இல்லாமல் யதார்த்தமாக இருக்கும்.
பாரதியார் பாடல் வரிகள் பொருத்தமாக இருந்ததால் படத்துக்கு தலைப்பாக வைத்தோம். படம் பார்க்கும்போது அது புரியும். மணிசர்மா மகன் சாகர் இசையமைத்துள்ளார். 5 பாடல்கள் உள்ளன. நாயகிக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். ஐதராபாத்தை சேர்ந்த நான் இயக்கும் முதல் தமிழ் படம் இது'' என்றார். ஒவ்வொரு சண்டையும் மிகை இல்லாமல் யதார்த்தமாக இருக்கும்.
பாரதியார் பாடல் வரிகள் பொருத்தமாக இருந்ததால் படத்துக்கு தலைப்பாக வைத்தோ