< Back
சினிமா செய்திகள்
3 டி படத்தில் விக்ரம்?
சினிமா செய்திகள்

3 டி படத்தில் விக்ரம்?

தினத்தந்தி
|
24 Jun 2022 2:56 PM IST

விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தொடர்ந்து அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை எடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இது விக்ரமுக்கு 61-வது படம். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படம் தங்க சுரங்கம் பற்றிய கதையம்சத்தில் தயாராக உள்ளதாகவும், உண்மை சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பகுதி படப்பிடிப்பை கேஜிஎப் படத்தை படமாக்கிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதோடு இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதன்பிறகு விக்ரம் பட வேலைகள் முழு வீச்சில் தொடங்க உள்ளன.

மேலும் செய்திகள்