< Back
சினிமா செய்திகள்
Vikram clears the rumours of him being part of SS Rajamouli and Mahesh Babus SSMB 29
சினிமா செய்திகள்

'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் நடிப்பதாக பரவிய தகவல் - விக்ரமின் சுவாரஸ்ய பதில்

தினத்தந்தி
|
6 Aug 2024 10:52 AM IST

'தங்கலான்' வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படக்குழு இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த 4-ம் தேதி ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம், ராஜமவுலியுடன் இணைவது குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், 'எஸ்.எஸ்.ராஜமவுலியும் நானும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரு படத்தில் இணைவது குறித்து பேசிவருகிறோம். ஆனால், அது எப்போது என்பது குறித்த எந்த திட்டமும் தற்போது இல்லை, என்றார். விக்ரமின் இந்த பதில் முன்னதாக 'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் அவர் நடிப்பதாக பரவிய தகவல் வதந்தி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் 'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்