< Back
சினிமா செய்திகள்
ரஜினிக்கு வில்லனாக விக்ரம்?
சினிமா செய்திகள்

ரஜினிக்கு வில்லனாக விக்ரம்?

தினத்தந்தி
|
18 May 2023 3:49 PM IST

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினியின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

'லால் சலாம்' படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தை ஞானவேல் டைரக்டு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஞானவேல் ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமானவர். ரஜினி படமும் ஜெய்பீம் போலவே உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேசி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்றும், எனவே தான் விக்ரமை நடிக்க வைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதனை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. சமீபகாலமாக முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்