கில்லியை தொடர்ந்து...ரீ-ரிலீசாகும் விஜய்யின் 'துப்பாக்கி'
|விஜய் நடித்த துப்பாக்கி படத்தை மீண்டும் திரையிட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
சென்னை,
தமிழில் வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வசூல் பார்க்கிறார்கள். ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இதுபோல் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு நல்ல வசூல் பார்த்தது. இந்த வரிசையில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி மீண்டும் திரையிட இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி படம் கடந்த 2012 நவம்பர் மாதம் வெளியானது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இது விஜய்யின் வெற்றிப் படங்கள் பட்டியலில் முக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.