< Back
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன்
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன்

தினத்தந்தி
|
9 Sep 2024 12:43 PM GMT

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகப் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அறிவித்திருந்தார்.

லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன் மாநகரம், மைக்கெல், ராயன் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். இவர், விஜய் மகன் படத்தில் நடிக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்