காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் பெற்றோர்
|நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாயார் ஷோபாவும் இன்று காலை காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்,
கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் காமாட்சி அம்மனை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாயார் ஷோபாவும் இன்று காலை காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதியில் 10 நிமிடங்கள் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொண்ட பின் அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
விஜய் அரசியலுக்கு வந்தது குறித்த கேள்விக்கு, என்னுடைய வாழ்த்துகள், ஆசீர்வாதம் எப்போதும் என் புள்ளைக்கு உண்டு. என்றார். மேலும், முன்பு போல நீங்கள் ஏன் அவர் அரசியல் செயல்பாட்டில் ஈடுபாடு காட்டுவதில்லை? என்ற கேள்விக்கு, "அப்படி எல்லாம் இல்லை. நான் எப்போதும் போல விஜய்யின் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டி வருகிறேன். என்றார்.