< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் புதிய தோற்றம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய தோற்றம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
5 Sept 2024 3:47 PM IST

‘கோட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் மகத்தின் மனைவி வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

விஜய் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார். தற்போது இதுவரை வெளியாகாத விஜய்யின் புதிய தோற்றம்கொண்ட புகைப்படத்தை நடிகர் மகத்தின் மனைவி வெளியிட்டுள்ளார். அதில் விஜய் புதிய தோற்றத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்