காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் படப்பிடிப்பு - வைரலாகும் 'லியோ' படக்குழு வெளியிட்ட வீடியோ
|விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
காஷ்மீர்,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.