< Back
சினிமா செய்திகள்
நடனம் ஆடும் போது அதிக உத்வேகம்  விஜய்யை புகழ்ந்த மனோபாலா...!
சினிமா செய்திகள்

"நடனம் ஆடும் போது அதிக உத்வேகம்" விஜய்யை புகழ்ந்த மனோபாலா...!

தினத்தந்தி
|
20 Oct 2022 12:18 PM IST

நடனம் ஆடும் போது அதிக உத்வேகம் 'வாரிசு' ஷூட்டிங்கில் விஜய்யை சந்தித்து பேசிய மனோபாலா டூவீட் செய்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விரைவில் இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில்,

வாரிசு பட ஷூட்டிங்கில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்