விஜய்யின் 'கோட்' பட நடிகைக்கு பிறந்தநாள் - வாழ்த்து தெரிவித்த படக்குழு
|நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் 'கோட்' படத்தின் அப்டேட் வழங்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இதனிடையே இந்த படத்தின் கதாநாயகி மீனாட்சி சவுத்ரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் வெங்கட் பிரபு உள்பட 'கோட்' படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "எங்கள் ஸ்ரீநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'கோட்' படத்தில் கதாநாயகியின் பெயர் ஸ்ரீநிதி என்பதை அவர் தெரிவித்துள்ளார்.