< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் 68-வது படம்
சினிமா செய்திகள்

விஜய்யின் 68-வது படம்

தினத்தந்தி
|
2 May 2023 6:13 AM IST

விஜய் நடிக்கும் 67-வது படமான லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

விஜய் அடுத்து நடிக்க உள்ள 68-வது படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த படத்தை அட்லி இயக்க இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் படங்கள் வந்துள்ளன. ஆனாலும் அட்லி இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால் விஜய் படத்தை இயக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. டைரக்டர் பேரரசுவும் விஜய்யை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். எனவே அவரது பெயரும் அடிபட்டது. இவர்கள் கூட்டணியில் திருப்பாச்சி, சிவகாசி படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தற்போது விஜய்யின் 68-வது படத்தை தெலுங்கு டைரக்டர் கோபிசந்த் மலினேனி இயக்க இருப்பதாகவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து நடிகர் ஜீவாவிடம் விஜய்யின் 68-வது படம் குறித்து தகவல் சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு விரைவில் என்று பதில் அளித்துள்ளார். எனவே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்