< Back
சினிமா செய்திகள்
வெற்றியை எதிர்நோக்கும் விஜய்தேவரகொண்டா
சினிமா செய்திகள்

வெற்றியை எதிர்நோக்கும் விஜய்தேவரகொண்டா

தினத்தந்தி
|
13 Aug 2023 12:32 PM IST

விஜய்தேவரகொண்டா செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ள 'குஷி' படத்தை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், 'குஷி'. இந்தப் படத்தை விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருமே, தங்கள் சினிமா வாழ்க்கையில் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் அவர்கள் இருவருக்குமே, கடந்த சில படங்கள் சரியாகப் போகவில்லை.

இந்த நிலையில் 'குஷி' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் காதல் மற்றும் குடும்ப பிணைப்பை, கணவன்- மனைவிக்குள் ஏற்படும் ஊடல், கூடலைப் பற்றிச் சொல்வதாக இருக்கலாம் என்று டிரெய்லரைப் பார்த்தால் புரிகிறது.

'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, உயர்ந்த நிலைக்கு வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு, அதன்பிறகு வந்த அனைத்து படங்களும் சுமார் மற்றும் தோல்வி படங்களாகவே அமைந்துவிட்டன. அதுவும் கடந்த ஆண்டு வெளியான 'லைகர்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ள 'குஷி' படத்தை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார், விஜய்தேவரகொண்டா.செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ள 'குஷி' படத்தை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார், விஜய்தேவரகொண்டா.

மேலும் செய்திகள்