< Back
சினிமா செய்திகள்
விமர்சித்தவருக்கு விஜயலட்சுமி பதிலடி
சினிமா செய்திகள்

விமர்சித்தவருக்கு விஜயலட்சுமி பதிலடி

தினத்தந்தி
|
19 May 2022 12:05 PM IST

சமூக வலைத்தளத்தில் தன்னை விமர்சித்து பதிவிட்டவருக்கு விஜயலட்சுமி கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை 28, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி சமூக வலைத்தளத்தில் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். விஜயலட்சுமியின் நடனத்தை பலரும் பாராட்டி பதிவுகள் வெளியிட்டனர். ஆனால் ஒரு பெண் அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? என்று பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.

இதற்கு விஜயலட்சுமி கோபமாக பதிலடி கொடுத்துள்ளார். விஜயலட்சுமி கூறும்போது, "அம்மாவாக ஆகிவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விட்டது, எனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு அர்ப்பணித்து விட்டேன் என்று மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா. நீங்கள் வேண்டுமானால் அதை செய்யுங்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை வாழ்வேன். விரும்பிய உடைகளை அணிவேன். நடனம் ஆடுவேன். உங்களை போன்றவர்களால்தான் தாயான பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். பொறாமையால் இதுபோன்று கருத்து சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை கூந்தலை நீங்களே வைத்து அதில் பூ வைத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்