விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!
|விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'படை தலைவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.