< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜயகாந்த்தின் மகனை இயக்கும் 'ரஜினி முருகன்' பட இயக்குநர்
|21 March 2024 6:33 PM IST
இயக்குநர் பொன்ராம் விஜயகாந்தின் மகனான சண்முகப்பாண்டியனை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தன் மகன் சண்முகபாண்டியனை ஒரு முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே விஜயகாந்திற்காக சண்முகபாண்டியன் நடிக்கவுள்ள திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக நடிகர்கள் விஷால் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
சண்முகபாண்டியனை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கினார். இதில் இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் இப்படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.