< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த் மறைவு - திரைப்பட படப்பிடிப்புகள் நாளை ரத்து
சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைவு - திரைப்பட படப்பிடிப்புகள் நாளை ரத்து

தினத்தந்தி
|
28 Dec 2023 12:13 PM IST

விஜயகாந்த் மறைவையொட்டி, திரையரங்குகளில் இன்று காலை காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி நாளை அனைத்து விதமான திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், திரையரங்குகளில் இன்று காலை காட்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்