கதாநாயகனாக விஜயகாந்த் மகன்
|சண்முகப்பாண்டியன் `படைத்தலைவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் `படைத்தலைவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர், ரிஷி ரித்விக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை யு. அன்பு டைரக்டு செய்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ``இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் இந்த படம் உருவாகிறது. புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் ஆக்ஷன் படமாக உருவாகிறது.
சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்'' என்றார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜயகாந்த் வெளியிட்டார். அதை வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த படத்தை ஜெகநாதன், சுமீத் சாய்கல் வழங்க டைரக்டர் சினிமாஸ் தயாரிக்கிறது. திரைக்கதை, வசனம்:பார்த்திபன் தேசிங்கு, ஒளிப்பதிவு:எஸ்.ஆர்.சதீஷ்குமார்.