விஜய் நிறைய படம் பண்ணனும்... அரசியல் வந்தது சரியா..? - கவுதம் மேனன் சொன்ன பதில்
|கவுதம் மேனன் இயக்கியுள்ள 'ஜோஷ்வா' திரைப்படம் மார்ச் 1-ந்தேதி வெளியாக இருக்கிறது.
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதம், 'விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று கூறினார்.
மேலும், விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்தால் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன்' என்று பதிலளித்தார்.