< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இரு மொழிகளில் விஜய் விஷ்வா படம்
|10 March 2023 11:09 AM IST
'கும்பாரி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக விஜய் விஷ்வா, கதாநாயகியாக மகா நடித்துள்ளனர். சாம்ஸ், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், மதுமிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து விஜய் விஷ்வா கூறும்போது, ''கும்பாரி படத்தில் நான் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் கடலும் கடல் சார்ந்த பகுதி என்கிற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம். இதில் ஒரு கிராமத்து இளைஞனாக நான் வருகிறேன். எனக்கு இது ஒரு சவாலான மற்றும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. குமாரதாஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். புதிய வித்தியாசமான கதை என்று அவர் ஊக்கம் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது'' என்றார்.