தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது?- காதலன் பதில்
|தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது என்பது குறித்து விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா. இவர் தற்போது மர்டெர் முபாரக் படத்தில் நடித்து இருந்தார். இவரும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் வந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' படத்தில் தமன்னா-விஜய் வர்மா நடித்த நெருக்கமான காட்சிகள் இணையதளமே சூடாகும் அளவு கிளுகிளுப்பாக அமைந்திருந்தன.
இருதரப்பிலும் தங்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில் 'எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்?' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் இருவரும் சிரிப்பையே பதிலாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது என்பது குறித்து விஜய் வர்மா தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, லஸ்ட் ஸ்டோரிசில் நாங்கள் நடிக்கும்போது டேட்டிங் செல்ல ஆரம்பிக்கவில்லை. அதன் பின்னர், ஒரு பார்ட்டி வைக்கவேண்டும் என்று நாங்கள் பேசினோம். ஆனால் அது அப்போது நடக்கவில்லை. அதன் பின்னர் ஒரு பார்ட்டி வைத்தோம். அதில் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது நான் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக தமன்னாவிடம் கூறினேன். அவ்வாறு கூறி 20 முதல் 25 நாட்கள் கழித்து நாங்கள் முதன்முதலில் டேட்டிங் சென்றோம். இவ்வாறு கூறினார்.
முன்னதாக, புத்தாண்டு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது இருவரும் டேட்டிங் சென்றதாக வதந்திகள் பரவின. அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தமன்னா தங்கள் இருவருடைய உறவு குறித்து வெளிப்படுத்தினார். அப்போதிலிருந்து இருவரும் சமூக ஊடகங்களில் தங்களுக்குள் கருத்து பரிமாறிக்கொள்வது, ஒன்றாக பல நிகழ்வுகளில் கலந்துகொள்வது என இருக்கின்றனர்.