< Back
சினிமா செய்திகள்
அட்லிக்காக விஜய் செய்த உதவி
சினிமா செய்திகள்

அட்லிக்காக விஜய் செய்த உதவி

தினத்தந்தி
|
15 July 2022 4:50 PM IST

அட்லி மீதான நட்பின் காரணமாக ‘ஜவான்’ படத்தில் சம்பளம் வாங்காமல் விஜய் நடிக்க இருக்கிறார்.

'ராஜா ராணி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர், அட்லி. அதன் பின்னர் விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களைஅடுத்தடுத்து இயக்கினார்.

அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.

'ஜவான்' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார். அட்லி மீதான நட்பின் காரணமாக சம்பளம் எதுவுமே வாங்காமல் அவர் நடிக்க இருக்கிறார். இதையடுத்து விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க 'ஜவான்' படக்குழுவினர் சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் 'ஜவான்' படத்திலும் தன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் நடித்துக் கொடுக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்