'லியோ' படத்தில் வந்த கமல்போல கைதி 2-ல் வரும் விஜய்?
|கைதி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019ல் வெளியான திரைப்படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் கைதி.
இப்படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்தார். மாநகரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமாக கைதி வேற லெவல் ஹிட் கொடுத்தது. விரைவில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில், கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யும் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கமல் குரல் வந்ததுபோல கைதி 2-ல் விஜய் குரல் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.