கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய்சேதுபதி மகன்...!
|நடிகர் விஜய்சேதுபதியின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஷாரூக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து இந்தி திரையுலகிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு 'பீனிக்ஸ் வீழான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.