விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தின் டிரைலர் வெளியானது
|'மகாராஜா'. படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார்.
சென்னை,
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் , இந்த படத்தின் ரிலீஸ் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
#MaharajaReleaseTrailer out now
— VijaySethupathi (@VijaySethuOffl) June 11, 2024
Tamil : https://t.co/fUWvcgc4Ye
Telugu : https://t.co/RTogejw0nr#MaharajaFromJune14
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP @Selva_ArtDir @rajakrishnan_mr… pic.twitter.com/VYsn4TT9Ii