< Back
சினிமா செய்திகள்
தமிழ் வெப் தொடரில் விஜய் சேதுபதி
சினிமா செய்திகள்

தமிழ் வெப் தொடரில் விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
3 April 2023 5:51 PM IST

இயக்குநர் மணிகண்டன் இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி பிசியான நடிகராக இருக்கிறார். பிற மொழி படங்களிலும் நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்கவும் அழைப்பு விடுக்கின்றனர்.

தற்போது அவர் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை படம் திரைக்கு வந்துள்ளது. இந்தியில் 3 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் அடுத்து தமிழில் தயாராகும் புதிய வெப் தொடரிலும் நடிக்கிறார். விஜய்சேதுபதி தமிழில் வெப் தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை எம்.மணிகண்டன் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். வெப் தொடரில் நடிக்க உள்ள இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்